Tuesday, December 29, 2009

நான் ரசித்த கவிதை கவிதை (பொதுவுடைமை)

கவிதை கவிதை (பேராண்மை திரை பாடல்)

விளையாடு, துள்ளி பாடு,
இந்த காடு, எங்க வீடு,
அந்த மலைகள் தூணுங்க,
அந்த மரங்கள் கூரைங்க,
இது கடவுள் பூமிங்க,
இங்கே நதிகள் சாமிங்க.
காட்டு கனிகள் எங்க விருந்து,
சுத்த காத்தே இங்க மருந்து,
நாங்க மண்ணுல கிடந்தும்,
அழுக்கு படல,
எங்க மூச்சு குழிய,
ஒரு புகையும் தொடல.

மண்ணுக்கு நாங்க யாரும் உரம் போடவில்லை,
காட்டு மனிதர் அதனால் உரம் போகவில்லை.

பொதுவுடைமை சமுதாயம் தொலஞ்சு போகவில்லை,
எங்க பறவைக்கும் விலங்குக்கும் பங்கு மறுத்ததில்ல.

மலை நாடு, தனி நாடு,
எங்க வீடு, ஒரு கூடு,
இங்க காத்தும் தண்ணியும்,
இன்னும் கலங்கபடல,
இந்த பச்சை மண்ணுல,
வேற பாதம்படல,
எங்க பொழப்பு இந்த காடு,
எங்க உடம்பு முதலீடு,
இந்த மண்ணின் வயசு,
எங்க மனுஷ வயசு,
இந்த மலையின் மனசு,
எங்க மனுஷ மனசு,

தேயிலையும் மரமாகும் அத வளர்பதில்ல,
சிகரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்ல,

கடவுளுக்கும் எங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்ல,
எங்க கைகலபோல் எங்களுக்கு மூலதனம் இல்ல.

*****கவிபேரரசு வைரமுத்து ******

1 comment: